மத்திய மலை நாட்டின் தென்கிழக்கே ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிராமமாக அழுப்பொத்தை மிளிர்கிறது. இயற்கையாக அமைந்துள்ள மலையரண்களால் சூழப்பட்டுளள் இக்கிராமம் சிங்கள மன்னர் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை முக்கிய கோட்டையாக காணப்பட்டது அதனாலேயே இது அழுபொத்த கொடுவ என அழைக்கப்படுகிறது.இக்கிராமத்தின் கண்ணாகிய எமது பாடசாலை 1923 ஜுலை 1ஆம் அரசினர் கலவன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது.
உயர்வான குணப்பண்புகள் நிறைந்த அறிவார்ந்த சமூகம்
எமது பாடசாலைக்கு உட்படும் பிள்ளைகளை மாறுபடும் உலகின் சவால்களுக்கு முகம்கொடுக்கக்கூடிய ஏனைய மனித உரிமைகளை பாதுகாக்கின்ற புத்திஜீவிகளாக சமூகத்திற்கு வழங்குதல்