நேரான வழியில் நாம் செல்ல
சீரான கல்வி நாம் பயில்வோமே
நிறைவான நபியை தந்திட்ட
இறையோனை போற்றி புகழ்வோமே
மலை நாட்டில் மிளிரும் முத்தாம்
அளுபொத்தை நகரின் சொத்தாம்
மதீனாவின் பெயரை என்றும்
இந்த அகிலத்தில் பரப்பு இறiவா
முறையான கல்வி நாம் பெறவே
உனதருள் வேண்டி நாமும் நிற்போமே
தாய்போல் சேய்கள் குறைதீர்க்கும்
தாய் நாட்டின் அரசை மதிப்போமே
நாம் பெற்ற கல்வி கலையால்
எமை ஆளாக்கும் அதிபர் ஆசான்
எமையீன்ற அன்னை தந்தைக்கு
குறை தீர்த்து அருள்வாய் ரஹ்மானே….!





