மாெ/மதீனா மஹா வித்தியாலயம்

எங்கள் பாடசாலை பார்வை இணைப்பு இங்கே

இல்ல விளையாட்டு போட்டி

2015-06-21 09.53.07.jpg
2015-06-21 09.53.07.jpg

அதிபர் செய்தி

திரு.M.U.M.ரிஸால் (SLPS)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற  அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பிக்கின்றேன்

            மத்திய மலை நாட்டின் தென்கிழக்கே  ஊவா மாகாணத்தின் மொனராகலை  மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிராமமாக அழுப்பொத்தை மிளிர்கிறது. இயற்கையாக  அமைந்துள்ள மலையரண்களால் சூழப்பட்டுளள் இக்கிராமம் சிங்கள மன்னர் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை முக்கிய கோட்டையாக காணப்பட்டது அதனாலேயே இது அழுபொத்த கொடுவ என அழைக்கப்படுகிறது.

            இக்கிராமத்தின் கண்ணாகிய எமது பாடசாலை 1923 ஜுலை 1ஆம் அரசினர் கலவன் பாடசாலையாக  ஆரமப்pக்கப்பட்டது. 1959 ஆம் ஆண்டு முதல் முதன்முதலாக எஸ்.எஸ்.சி பரீட்சைக்கு இப்பாடசாலை மாணவர்கள் தோற்றினர். 2003 ஜுலை 6ஆம் திகதி மகா வித்தியாலயமாக தர உயரவு பெற்ற இப் பாடசாலை  2010 ஆம் ஆண்டு உயரத்ர பரீட்சைப் பெறுபேறுகளின் படி முதன் முதலாக மாணவர்கள் கலைத்துறையில் பல்கலைக்கழகம் செல்ல ஆரம்பித்தனர்.

           சுமார் 35 பட்டதாரிகளை இப்பாடசாலை உருவாக்கியுள்ளது. அத்துடன் எமது மாணவர்கள் பல்வேறு துறைகளிளும் சிறந்து விளங்கி சமூகத்திற்கு பாரிய பங்களிப்பையும் வழங்கி  வருகின்றனர். மொணராகலை கல்வி வலையத்தின் ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலையான எமது வித்தியாலயம் 2013ம் ஆண்டு இடைநிலை பாடசாலை வகைக்குள் உள்வாங்கப்பட்டு ஆரம்ப பிரிவு வேறாக்கப்பட்டு அன் நூர் வித்தியாலயம் எனும் பெயரில் தனியாக இயங்கி வருகின்றது.

          தொழிநுற்ப ஆய்வுகூட வசதிகள், 61 கணணிகளைக் கொண்ட கணணி ஆய்வுகூடம் ,விளையாட்டு மைதானம், முறையான வாசிகசாலை, பள்ளிவாசல் என சகலவசதிகலையும் எமதுபாடசாலை கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குறிய விடயமாகும். 2023 ஜுலை 1ம் திகதி எமது பாடசாலை நூற்றாண்டை பூர்த்தி செய்யும் அதே வேலை மொ மதீனா மஹா வித்தியாலயம் என பெயர் மாற்றம் பெற்றது.

          கல்வியில் மாத்திரமன்றி விளையாட்டு இணைப்பாடவிதான செயற்பாடுகள் என பல துறைகளிலும் சாதனைபடைக்கும் எமது மாணவர்கள் இன்ஷா அல்லாஹ் எதிர் காலத்தில் இன்னும் அதிக சாதணை படைக்கவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

திரு.M.U.M.ரிஸால் (SLPS)
அதிபர்
மாெ/மதீனா மஹா வித்தியாலயம்.