மாெ/மதீனா மஹா வித்தியாலயம்

வரலாறு

எங்கள் பாடசாலை பார்வை இணைப்பு இங்கே

இல்ல விளையாட்டு போட்டி

2015-06-21 09.53.07.jpg
2015-06-21 09.53.07.jpg

    ஊவா மாகாணத்தின் மாெணராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள  வரலாற்றுப்புகழ் மிக்க அளுப்பொத்தை என்னும் பழைமை வாய்ந்த கிராமத்தில் எமது வித்தியாலயம் அமைந்துள்ளது. 1923ம் ஆண்டு ஓலைக் கொட்டில் ஒன்றில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்தாலும்  இதற்கு முன் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்று இருந்திருக்கலாம்

ஊர் எல்லையில் அமைந்துள்ள ஸியாரம் 1790ன் பிற்பகுதியில் அமைந்திருக்கக் கூடும் என சான்றுகள் குறிப்பிடுகின்றன.

சிதைந்துபோன பழைய ஜூம்ஆப்பள்ளிவாயலின் வரலாறு எமது மூத்த தலைமைப்பரம்பரைக்கும் கூடத்தெரியாதென்பதே உண்மை. எது எப்படி இருப்பினும் இப்பாடசாலையின் வரலாறு எமது முன்னோர்களால் காலத்துக்கு காலம் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளமை பெருமைக்குரிய விடயம்.

வாழ்வியல் ஆதாரங்களையும் வரலாற்றுத் தடயங்களையும் எமது சந்ததிகளுக்கு விட்டுச்செல்வது நம் தலையாய கடமையாகும்.

அளுப்பொத்தை பாடசாலை பின் நிலைகளில் மாற்றமடைந்துள்ளது

  • 1923ல் அரசினர் பாடசாலை

  • 1930 களில் அரசினர் ஆண்கள் பாடசாலை

  • 1940 களில் அரசினர் கலவன் பாடசாலை

  • 1950 களில் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை

  • 1970 களில் மொஃஅளுப்பொத்தை முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம்

  • 2003 மொஃஅளுப்பொத்தை முஸ்லிம் மகா வித்தியாலயம்

  • 2013 மொஃஅளுப்பொத்தை முஸ்லிம் மகா வித்தியாலயம் (இடைநிலைப் பாடசாலை)

  • 2023 மொஃஅளுப்பொத்தை மதீனா மகா வித்தியாலயம்

இது பாடசாலைக் கல்வி நூற்றாண்டின் வளர்ச்சியாகும்.

அபிவிருத்தியின் படிகள்

  • 1957 துளுஊ வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது

  • 1959 ளுளுஊ (புஊநு) பரீட்சைக்கு முதன்முதல் தோற்றியமை.

  • 2001 க.பொ.த உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டமை

  • 2003 மகா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டமை.

  • 1c பாடசாலையாக வகைப்படுத்தப்பட்டமை.

  • 2023 க.பொ.த உயர்தர வர்த்தகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டமை.

பௌதிக வளங்கள்

பாடசாலைக் காணி 3 கட்டங்களில் பெறப்பட்டு வக்ப் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பக் காணி நன்கொடையாகவும் ஏனைய இரு கட்டங்களில் கிரயம் கொடுத்தும் பெறப்பட்டுள்ளன என்று பாடசாலைத் தகவல்கள் கூறுகின்றன.

பாடசாலைக் காணிக்கு எல்லைகள் இருந்தாலும் அவை வரையறுக்கப்படவில்லை. 1933ம் ஆண்டு மர்ஹ_ம் மரிக்கார் என்ற சமூக சேவையாளரும் உமர் லெப்பை என்ற செல்வந்தரும் ஒரு பகுதி காணியை வழங்கி ஆரம்ப கட்டடத்துக்கான இடத்தை ஒதுக்கிக் கொடுத்தனர்.

ஓலைக் கொட்டில் நிரந்தரக் கட்டடமாக உருப்பெற்றது. 1933ம் வருடம் மர்ஹ_ம் மரைக்கார் என்ற நல்லவரும் உமர்லெப்பை என்ற செல்வந்தரும் ஒரு பகுதி காணியை வழங்கி பாடசாலையின் முதல் கட்டடத்திற்கான அத்திவாரத்திற்கு அவகாசம் வழங்கினர். ஓலைக் கொட்டில் நிரந்தரக்கட்டடமாக உருப்பெற்றது.1933ல் ஆங்கிலேய ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஊவா மாகாண கவர்னரின் மேற்பார்வையில் 3020 கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனுடன் இணைக்கப்பட்ட அறைகள் 99 1515 1010 109 என்பனவாகும். 1951ல் மேற்படி கட்டடம் விஸ்தரிக்கப்பட்டு 5020 ஆக பரிமாற்றம் செய்யப்பட்டது. 1972ம் ஆண்டு 8020 அளவினதான கட்டடம் பெரிய வகுப்பறை மண்டபமாக 1020 மேடையுடனும் 2010 அறையுடனும் அமைக்கப்பட்டது. இது மர்ஹ_ம் ளு.ஆ. ஸ_பைர் அதிபர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது. 1978ம் ஆண்டு 10020 அளவுடைய வகுப்பறைக் கட்டடம் நீண்ட மண்டபமாக நிர்மாணிக்கப்பட்டது இதனை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவஆ. புஞ்சி பண்டார அவர்கள் பெற்றுத்தந்தார்கள். இதற்கான முயற்சியை மர்ஹ_ம் ஆ.ர்.ஆ. இனாயத்துல்லா மேற்கொண்டார். இவருடன் அதிபர் ஆ.து.ஆ. தௌஹீத் மற்றும் ஆ.ஆ. ஷரீப் ஆசிரியர் ஒத்துழைத்தனர். இக்கட்டடம் 1979ம் ஆண்டு அதிபராகப்பொறுப்பேற்ற ஆ.ஆ.ஷரீப் அவர்களின் காலத்தில் பூர்த்தியாக்கப்பட்டது. பாடசாலைக் காணிக்கு 2வது முறையாக ஒரு பகுதி இணைத்து கொள்ளப்பட்டமை. 1971.11.11 ம் ஆண்டு மர்ஹ_ம் ளு.ஆ. சுபைர் அதிபரின் முயற்சியால் 1 ஏக்கரும் 1 பேச்சஸ_ம் கொண்ட காணி பெறப்பட்டு கிராம அதிகாரி மூலம் மொனறாகலைப் பிரதேச கல்வி அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது. இக்காணியிலையே 1972ம் ஆண்டின் கட்டடம் உருவானது.
1993ம் ஆண்டு மறைந்த ஜனாதிபதி சு. பிரேமதாஸ அவர்களின் கம்உதாவ திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கடியன்தலாவை கிராமத்திற்கு செல்லும் பாதை விஸ்தரிக்கப்பட்டு பாடசாலைக்காணியின் அகலத்தால் 10அடி பாதைக்கு சேர்க்கப்பட்டது.
1994ல் பிரதேச உறுப்பினர் ஐ.ஆ. ஹ_ஸைன் அவர்களின் முயற்சியால் பாராளுமன்ற உறுப்பினர் னு.ஆ. ஆரியரத்ன அவர்கள் மூலம் மினி விஞ்ஞான ஆய்வு கூடம் ஒன்று 3020 அளவில் அமைக்கப்பட்டது 1995ம் ஆண்டு 3020 கொண்ட விவசாய அலகும் 2020 மனையியல் அலகும் இனைக்கப்பட்ட ஒரே கட்டடமாக அதிபர் ஊ.ஆ. ரபாய்டீன் அவர்கள் காலத்தில் கௌரவ முதலமைச்சர் பேர்சி சமரவீர அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு புதிய அதிபர் விடுதி கௌரவ முதலமைச்சர் பேர்சி சமரவீர அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவ் விடுதிக்கான நிதியை உலக வங்கி ஒதுக்கியிருந்தது. 1952ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த பழைய அதிபர் விடுதி முற்றாக சேதமடைந்து இருந்தது. இதன் 80 கூரைத்தகடுகள் மொனறாகலை பிரதேச கல்வி அதிகாரியினால் 1985ம் ஆண்டு மெதிரிய வித்தியாலய அதிபரிடம் கையாளிக்கப்பட்டது.1994ன் பின்னரே உலக வங்கி மற்றும் ஏனைய கல்விசாரா அமைப்புகளின் உதவிகள் பாடசாலைகளுக்கு வர ஆரம்பித்தன. 2000 ஆண்டு தரம் யு தகுதி பெற்ற நவீன நூலகக் கட்டடம் ஒன்று (4025) கௌரவ முதலமைச்சர் சமரவீர வீரவன்னி அவர்களால் உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டினால் பெறப்பட்டது. 2004ம் ஆண்டு மர்ஹ_ம் ர்.ஆ. ராஸிக் என்பவருக்குச் சொந்தமான பாடசாலைக்கு அணித்தாகவுள்ள 110 பேச்சஸ் அளவுள்ள காணியொன்று அப்போதைய அதிபரினால் அவரது மைத்துனர் ஹ_ஸைன் அவர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலைக்காணியுடன் இணைக்கப்பட்டது. இம் முயற்சிக்கு ஆசிரியர் குழு ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆ.ளு.ஆ. இர்பான் ஓய்வுபெற்ற அதிபர் ஆ.ஆ. ஷரீப் மௌலவி ளு.ஆ. ரபியுதீன் மர்ஹ_ம் ஆ.ஊ.ஆ. ரியாழ்டீன் யு.மு.ஆ. நவாஸ் ஹாஜி பிரதி அதிபர் ஆடீஆ அன்வர் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். இதற்கு நிதி வழங்கிய நல்மனம் படைத்தோர் நன்றிக்குரியவர்கள். 2004 இல் வாங்கப்பட்ட காணியில் விளையாட்டு மைதானம் அமைக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு வரை மூன்று கட்டங்களில் பூர்த்தியாக்கப்பட்டது. 2005ம் ஆண்டு பாடசாலைக்கான நீர் விநியோகம் குயுளுர்ஐழுN டீருபு சகோதர்களின் தாயாரால் பெற்றுக்கொடுக்கப்பட்டது. இதற்கான குழாய் உபகரணத்தொகுதி ஐ.யு. சுஜா அவர்களால் வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு கலாசார அலகு என்னும் பெயரில் பள்ளிவாயல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. இதனை மாவனல்லையைச்சேர்ந்த அல்ஹாஜ் ரிஸ்மி அவர்கள் தமது பெற்றோரின் ஈசாலே தவாபிற்காக அமைத்தார்கள். இதற்கு படல்கும்புரை கமால்தீன் ஹாஜியார் சிபாரிசு செய்தார்கள் இதனை நாவலப்பிட்டி மஹ்ரூப் ஹஸரத் வகுப் செய்ய வைத்தார்கள்.
இது தற்போது முற்றாக அகற்றப்பட்டுள்ளது சுவர்களில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளும் கூரை சேதமடைந்ததுமே காரணமாகும். 2006 இல் வாயிற் கதவு அமைக்கப்பட்டது மாகாண சபை உறுப்பினர் குமாரசிரி ரத்னாயகாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இது அமைக்கப்பட்டது. 2007ம் வருடம் கௌரவ முதலமைச்சர் விஐயமுனி சொய்ஸா அவர்களால் இருமாடி கட்டிடத்தின் முதற் தொகுதி பூர்த்தியாக்கப்பட்டது. 2008ம் வருடம் க.பொ.த சாதாரண தரத்திற்குரிய முறையான ஆய்வு கூடம் ஒன்று கௌரவ முதலமைச்சர் விஐpத் விஐயமுனி சொய்ஸா அவர்களின் சிபாரிசின் பேரில் கல்வி அமைச்சினால் பெற்றுக்கொடுக்கப்பட்டது. இதே வருடம் படல்கும்புரையை சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் மெனிக் ஜயே அவர்களால் வாயிற்கதவில் இருந்து இருமாடி கட்டிடம் முடியும் வரை கொன்கிரீட் பாதை ஒன்று 125அடிக்கு அமைக்கப்பட்டது. 2010ம் ஆண்டு ஊவா மாகாண கல்வி திணைக்களத்தினால் உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் கணணி அலகு ஒன்று பெறப்பட்டமை. 2013ம் ஆண்டு சிறுவருக்கான விளையாட்டுத்திடல் ஒன்றுக்கான உபகாரணங்கள் ருNஐஊநுகு அமைப்பினால் பொருத்தப்பட்டது. இதே வருடம் எமது வித்தி;யாலயம் 1000 பாடசாலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டமையால் மஹிந்தோதய தொழில் நுட்ப ஆய்வு கூடம் நிர்மாணிக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட தொகை 90 இலட்சம் ரூபா ஆகும். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சம்;பத் ஜயசூரிய அவர்களால் டீயுNனு ளுநுவு பெற்றுத்தரப்பட்டது. 2015ல் இறுதிப்பகுதியில் 19 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன மலசலகூடத்தொகுதி அமைக்கப்பட்டது.
அதிபர் ரு.ஆ ரிஸால் அவர்களின் முயற்சியால் 8020 வகுப்பறைக்கட்டடத்தின் பாதுகாப்புக்காக இரும்புக்கம்பி வலையுடன் கூடிய மதில் ஒன்று அமைக்கப்பட்டது. ஏற்கெனவே அகற்றப்பட்ட சேதமுற்ற பள்ளிவாயல் அமைந்திருந்த இடத்தில் 50 இலட்சம் ரூபா செலவில் பதுளை ஸபான் ஹாபிஸ் அவரின் முயற்சியில் அதிபர் யு.ரு.ஆ ரிஸால் அவர்களின் வேண்டு கோளின் பேரில் இருமாடி பள்ளிவாசலுக்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது. இம்முயற்சியின் பின்னணியில் ஆசிரியர் யுருஆ ரிஸான் அலி அவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி அபிவிருத்தி

  • 1923 தொடக்கம் 1954 வரை தரம் 01 -- 05 வகுப்புகள்

  • 1939 வரை பாடசாலை அதிபர் மாத்திரமே ஆசிரியராகவும் சேவை புரிந்துள்ளார்.

  • 1939இல் ஒரு ஆசிரியை சேவைக்கு வந்துள்ளார்.

  • 1949 இல் ஊரின் முதல் ஆசிரியர் எம் எஸ் எம் சுபைர் அதிபருடன் சேர்ந்து கொண்டார்

  • 1955 தரம் 06

  • 1956 தரம் 07

  • 1957 jsc

  • 1958 SSC  PREP

  • 1959 SSC FINAL

  • 1957 ஆம் ஆண்டு SSCவகுப்புக்கான அநுமதி கிடைத்தது.

  • 1959 ஆம் ஆண்டு முதன் முறையாக SSC பரீட்சைக்கு 04 பேர் தோற்றினர்

  • 1961ல் இவ்வூரின் முதல் பெண் ஆசிரியை ஏ சி நசீகத்தும்மா சேவையில் சேர்ந்தார்.

  • 1970 வரை துறை சார் ஆசிரியர்கள் சிங்களம் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு மாத்திரமே நியமிக்கப்பட்டனர்.

  • 1970 ல் பின்னரே கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

  • 2000 இன் பின்னர் துரைசார் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாகவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாகவும் தொண்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

  • 2001 ஆம் ஆண்டு க போ தா உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.

  • 2003இல் மர்ம் எம்எச் எம் முபாரக் ஹாஜியாரின் முயற்சியின் கீழ் மகா வித்யாலயமாக இப்ப பாடசாலை தரம் உயர்த்தப்பட்டது.